தெற்கு கோசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு – மத்திய இந்தியாவில் தெற்கு கோசலம் கி பி 375

தெற்கு கோசலம் அல்லது தட்சின கோசலம் (Dakshina Kosala) (ஒடியா: ଦକ୍ଷିଣ କୋଶଳ ସାମ୍ରାଜ୍ୟ) கோசல நாட்டின் தெற்குப் பகுதிகளை பிரித்து நிறுவப்பட்ட அரசாகும். தெற்கு கோசலத்தை இராமரின் மகன் குசன் ஆண்டார். தெற்கு கோசல நாடானது, தற்கால இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் ஒடிசாவின் மேற்கு பகுதிகளைக் கொண்டது. இராமரின் தாயும், தசரதனின் பட்டத்து இராணியுமான கௌசல்யை, தெற்கு கோசால நாட்டைச் சேர்ந்தவர் என இராமாயணக் காவியம்,கூறுகிறது.

இதிகாசகால குறிப்புகள்[தொகு]

இராமாயணக் குறிப்புகள்[தொகு]

இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள் மற்றும் புராணங்களில் பரத கண்டத்தின் வடக்கில் இருந்த பண்டைய கோசல நாட்டை சூரிய வம்சத்தின் இச்சுவாகு குல வழித்தோன்றல்கள் அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆண்டனர் எனக் குறிப்புகள் உள்ளது. கோசால நாட்டின் தலைநகரான அயோத்தியில் இராமர் பிறந்து, கோசலையை அரசாண்டார்.

இராமருக்குப் பின்னர் கோசல நாட்டை பிரித்தது, இராமரது இரண்டு மகன்களில் மூத்தவரான குசன், சிராவஸ்தியை தலைநகராகக் கொண்டு வடக்கு கோசல நாட்டையும், இளைய மகன் லவன், விந்திய மலைகளில் பாயும் குசாவ்ரதே ஆற்றின் கரையில் உள்ள தற்கால பிலாஸ்பூரில் குசஸ்தலிபுரம் எனும் புதிய தலைநகரை நிறுவி தெற்கு கோசலத்தையும் ஆண்டார்.

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

தருமன் நடத்தும் இராசசூய வேள்வியின் பொருட்டு சகாதேவன் பரத கண்டத்தின் தெற்கு பகுதி நாடுகளின் மீது படையெடுத்துச் செல்கையில், தட்சின கோசல நாடு எனப்படும் தெற்கு கோசல நாட்டையும் வென்று, இராசசூய வேள்விக்கு கப்பம் வசூலித்ததாக மகாபாரத்தின் சபா பருவத்தில் அத்தியாயம் 30-இல் விளக்கப்பட்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

தெற்கு கோசல நாடு தற்கால சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் மேற்கு ஒடிசா மாநிலப் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியின் அருகில் மகத நாடு, காசி நாடு போன்ற நாடுகள் அசுர வளர்ச்சி பெற்றதால், தெற்கு கோசல நாடு நலிவுற்று வீழ்ச்சியடைந்தது.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கோசலம்&oldid=2282225" இலிருந்து மீள்விக்கப்பட்டது