உசிநரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசிநரர்கள் (Usinaras (தேவநாகரி:उसीनर) பரத கண்டத்தின் மேற்கில் வாழ்ந்த பண்டைய மக்கள் ஆவார். உசிநரர்கள், காந்தாரத்திற்கு அருகில் உள்ள தக்சசீலா பகுதியில் வாழ்ந்தாக வேத கால இலக்கியங்கள் கூறுகிறது.

வேத இலக்கியங்களில் மத்திரர்கள், கேகயர்கள் மற்றும் சிபிக்களுடன், உசிநரர்கள் தொடர்புறுத்தி பேசுகிறது. பாணினியின் கூற்றுப்படி, உசிநரர்களின் குடியிருப்புகள், வாகிகா நாட்டின் பகுதியாக இருந்தது.

வேத இலக்கியங்களில் உசிநரர்கள்[தொகு]

ரிக் வேதத்தில் 10.69.10ல் உசிநராவின் இளவரசி உசிநாரினியை குறிக்கிறது.[1] ஐதேரேய பிராமணம் உசிநரர்களை, குரு, பாஞ்சால பகுதிகளில் வாழ்ந்ததாக கூறுகிறது.[2]

கௌசிதகி உபநிடதம் 4.1ல், உநிநர மக்கள், மத்திய தேசத்தின் வடக்கில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறது. கோபாத பிராமனம் உசிநர மக்களை கங்கைச் சமவெளியில் வடக்கு மக்கள் எனக்கூறுகிறது.[3]

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

மகாபாரத காவியத்தில் பல இடங்களில் மன்னர் உசிநரா மற்றும் அவரது மகன் அறம் கொண்ட சிபிச் சக்கரவர்த்தியைக் குறிப்பிடுகிறது.[4]

திரௌபதி சுயம்வரத்தில் உசிநரா இளவரசன்[தொகு]

திரௌபதி சுயம்வரத்தில், மத்திர நாட்டின் மன்னர் சல்லியன், பாக்லீக நாட்டின் சோமதத்தன் ஆகியவர்களுடன் உசிநரா நாட்டு மன்னர் சிபிச் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டார் என மகாபாரதத்தின் ஆதி பருவம் கூறுகிறது.[5] See Ganguli's Trans: [1].

குருச்சேத்திரப் போரில் உசிநரர்கள்[தொகு]

குருச்சேத்திரப் போரில் உசிநரப் படைகள், கௌரவர்கள் அணியில் இணைந்து, பாண்டவப் படைகளுக்கு எதிராக போரிட்டனர். கர்ண பருவம், பதினேழாம் நாள் போரில், கர்ணனுக்கு ஆதரவாக போரிட்ட உசிநரர்கள், அருச்சுனனின் அம்புகளுக்கு இரையானர்கள்[6]

தரம் குறைந்த சத்திரிய உசிநரர்கள்[தொகு]

சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், திராவிடர்கள், கலிங்கர்கள், புலிந்தர்கள், உசிநரர்கள் போன்ற சத்திரியர்கள், அந்தணர்களை ஆதரிக்காத காரணத்தினால், இம்மக்களை தரம் குறைந்த சத்திரியர்களாக மகாபாரதத்தின் அனுசாசன பருவம் குறிப்பிடுகிறது.[7]

பாணினியின் அஷ்டத்தாயி[தொகு]

பாணினியின் அட்டாத்தியாயி நூல், உசிநரா மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனக்குறிப்பிடுகிறது.[8] மேலும் உசிநரா மக்கள் வாகிக நாட்டில் வாழ்ந்தாகவும் கூறுகிறது.[9]

பௌத்த இலக்கியங்களில் உசிநரா[தொகு]

பௌத்த ஜாதக கதைகளில் காசி நாட்டு மன்னராக உசிநராவைக் குறிப்பிடுகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 10.69.10
  2. Aitareya Brahmana VIII.14.
  3. i.e Savasas-Usinareshu-Udichyeshu, Gopatha Brahmana II. 9
  4. Mahabharata 12.29.39; 1.93; 3.197 முதலியன
  5. Mahabharata 1.185-13-15
  6. Mahabharata 8.5.
  7. Mahabharata 13.33.20-21 & Mahabharata 13.35.17-18.
  8. II.4.20; IV.2.118
  9. cf: Kashika on Sutra IV.2.118: Usinareshu ye Vahikagramah.
  10. Jataka.iv.181ff
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசிநரர்கள்&oldid=2710869" இலிருந்து மீள்விக்கப்பட்டது