கேகய நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேகய நாடு (Kekeya), பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு தற்கால ஆப்கானித்தான் நாட்டிற்கு வடக்கே கசக்கஸ்தானில் அமைந்திருந்தது. கேகய நாடு குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

இராமாயணக் குறிப்புகள்[தொகு]

வால்மீகி எழுதிய இராமாயண காவியத்தில் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டுப் பேரரசன் தசரதனின் இளைய மனைவி கைகேயி, கேகய நாட்டு இளவரசியாவாள். கைகேயின் மகன் பரதன், காந்தார நாட்டை வென்று தக்சசீலா நகரை நிர்மானித்தான்.

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

வியாசர் எழுதிய மகாபாரத இதிகாசத்தில், ஐந்து கேகய இளவரசர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது. குருச்சேத்திரப் போரில், பாண்டவர் அணி சார்பாக, கௌரவர் அணிக்கு எதிராக ஐந்து கேகய இளவரசர்கள் போரிட்டனர். இந்த ஐந்து கேகய நாட்டு இளவரசர்களின் பங்காளிகளிகளான நூறு கேகய இளவரசர்கள் கௌரவர்கள் சார்பாக போரிட்டனர் (மகாபாரதம் 5-19,30,198), (6,16) என குறிப்புகள் உள்ளது.

பாகவத புராணக் குறிப்புகள்[தொகு]

குந்தியின் சகோதரியான சுருதகீர்த்திக்கும் - கேகய நாட்டு மன்னர் திருஷ்டகேதுவிற்கும் பிறந்தவர்களே ஐந்து கேகய இளவரசர்கள் ஆவர். குந்தியின் மற்றொரு சகோரியான சுருததேவிக்கும், கருஷ நாட்டு யாதவ மன்னர் விருத்தசர்மாவிற்கும் பிறந்தவனே தந்தவக்ரன் ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான சுருதசிரவஸ் - சேதி நாட்டு மன்னர் தமகோசனுக்கும் பிறந்தவனே சிசுபாலன் ஆவார். குந்தியின் மற்றொரு சகோதரியான இராஜத்திதேவி, அவந்தி நாட்டு மன்னருக்கும் திருமணம் நடைபெறுகிறது. (பாகவத புராணம், காண்டம் 9, பகுதி 24 (யது குலம்|யாதவர்களின் வரலாறு) சுலோகங்கள் 37 - 40)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kekeya Kingdom

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகய_நாடு&oldid=2282214" இலிருந்து மீள்விக்கப்பட்டது