இமயமலை நாடு
Jump to navigation
Jump to search
இமயமலை நாடு (Himalaya kingdom) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் இமயமலையில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும். மலைகள் சூழ்ந்த இமயமலை நாட்டைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரத இதிகாசம் விளக்கமாக குறிக்கிறது. இந்நாட்டின் ஆட்சியாளர் இமாவன் ஆவார். இவரது மகள், தவமிருந்து சிவனை மணந்த பார்வதி ஆவார்.
மகாபாரதக் குறிப்புகள்[தொகு]
தருமன் நடத்தும் இராசசூய வேள்விக்காக திறையை வசூலிப்பதற்கு அருச்சுனன், பரத கண்டத்தின் வடக்கு திசையில் உள்ள இமயமலை நாடுகளை நோக்கி படையெடுத்துச் செல்கையில் உத்தர குரு, நேபா நாடு, பர்வத நாடு, கிண்ணர நாடு, கிம்புருச நாடு, கிராத நாடு, குஹ்யர்களால் ஆளப்படும் ஹாராடகம் போன்ற நாடுகளை வெற்றி கொண்டார். [1]