பௌண்டர நாடு
பௌண்டர நாடு | |
---|---|
கிமு 1280–கிமு 300 | |
தலைநகரம் | மகாஸ்தான்கர் |
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் பாளி மொழி |
சமயம் | வேத சமயம் இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் |
• தொடக்கம் | கிமு 1280 |
• முடிவு | கிமு 300 |
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் ( தினஜ்பூர் மாவட்டம்) இந்தியா (உத்தர தினஜ்பூர் மாவட்டம் & தெற்கு தினஜ்பூர் மாவட்டம், (மேற்கு வங்காளம்) |
பௌண்டர நாடு (Pundra kingdom), பரத கண்டத்தின் கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றின் பகுதிகளைக் பகுதிகளைக் கொண்டிருந்தது.
பாகவத புராணத்தில்
[தொகு]ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர், கிருஷ்ணரைப் போன்று வேடம் தரித்து, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான். பின்னர் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.
மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு, அங்க நாடு, வங்க நாடு, கலிங்க நாடு மற்றும் சுக்மா நாடுகளின் மன்னர்கள் ஆவார்.
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு மற்றும் கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.
குருச்சேத்திரப் போரில்
[தொகு]குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 7:20) ஆயிரக்கணக்கான பௌரண்ட நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.[1]
பிற குறிப்புகள்
[தொகு]- மத்சய நாட்டின் மன்னரின் பெயர் பௌண்டர-மத்சயன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாபாரதம் 1: 67)
- திரௌபதியின் சுயம்வரத்தில் பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரகன் என்பவர் கலந்து கொண்டார் என ஆதி பருவம், அத்தியாயம் 188-189-இல் குறிப்பிட்டுள்ளது. (1:188)
- பீமனின் போர்ச் சங்கின் பெயர் பௌண்டரம் ஆகும். (மகாபாரதம் 6: 25, 51).
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (மகாபாரதம் 7:90)