விசித்திரவீரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விசித்திரவீரியன் மகாபாரதக் கதையில் வரும் சாந்தனு என்ற மன்னனுக்கும் அவரது மனைவி சத்யவதிக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஆவார். இவரது அண்ணனான சித்ராங்கதன் இவரது தந்தை சாந்தனுவைத் தொடர்ந்து அஸ்தினாபுரத்தின் மன்னர் ஆனார். சித்ராங்கதன் வாரிசு இல்லாமல் இறந்து விட்டதால் அவரைத் தொடர்ந்து விசித்திரவீரியன் மன்னர் ஆனார்.

விசித்திரவீரியன் அரசுப்பொறுப்பேற்ற போது அவர் சிறுவனாகையால், அவரது சார்பாக பீஷ்மர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய திருமணத்திற்காக காசி மன்னனின் புதல்விகளின் சுயம்வரத்தின் போது பீஷ்மர் அங்கு சென்று சுயம்வரத்தினை வென்று அம்மூன்று இளவரசிகளையும் கொண்டுவந்தார்.

அம்பா வேறு ஒருவருடன் காதல்வயப் பட்டமையால் அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் மணமான சிறிது காலத்திலேயே அவர் இறந்து விட்டார்.

அத்தினாபுரத்துக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டதால், விசித்திரவீரியனின் மனைவிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோர் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பீஷ்மரைச் சத்தியவதி கேட்டுக்கொண்டாள். ஆனால், மணம் முடிக்காமலேயே வாழ்ந்துவிடுவதாக பீஷ்மர் உறுதி எடுத்துக்கொண்ட படியால் அவர் அதை மறுத்துவிட்டார். சத்தியவதிக்கு வேறொருவர் மூலம் பிற்ந்த மகனான வியாசர் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பீஷ்மர் ஆலோசனை கூறினார். இதன்படி, வியாசருக்கு அம்பிகா, அம்பாலிகா ஆகியோர் மூலம் பிறந்தவர்களே திருதராட்டிரனும், பாண்டுவும், விதுரரும் ஆவர்.

தலைமுறை அட்டவணை[தொகு]

பிரதிபன் சுனந்தா
கங்கை சந்தனு சத்தியவதி பராசரர் பாலிகன் தேவாபி
பீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் வியாசர் சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (தாசி மூலம்)
திருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=விசித்திரவீரியன்&oldid=2075349" இருந்து மீள்விக்கப்பட்டது