உள்ளடக்கத்துக்குச் செல்

பராசரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பராசரர் வியாசருடைய தந்தை.[1] இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர-ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது. விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியரும் இவரே. வியாசர் இவர் எழுதிய விஷ்ணு புராணத்தை சீர்படுத்தி அவர் இயற்றிய மற்ற புராணங்களுடன் சேர்த்துக்கொண்டார்.[2]

பன்னிரண்டாவது நூற்றாண்டில் ராமானுஜர் தன்னுடைய சீடர்களில் ஒருவருக்கு பராசரர் என்று பெயரிட்டார். அவர் பராசர பட்டர் என்று பிரசித்தி பெற்றார். அவர் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு விரிவான பாஷ்யம் (உரை) இயற்றினார். 'பராசர-பட்ட பாஷ்யம்' என்றே புகழ் பெற்ற அவ்வுரை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டு சிறந்த பாஷ்யங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section183.html
  2. http://devanga.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/devanga-kothiras-history-of-baraasara-maharishi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசரர்&oldid=2716784" இலிருந்து மீள்விக்கப்பட்டது