நான்காம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் நான்காம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்
[தொகு]நான்காவது நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை மறுபடி அணிவகுத்தார்.
பீமன் மிகுந்த வெறியுடன் போர் புரிந்தான். துரியோதனன் பெரியதொரு யானைப் படையைப் பீமன் மேல் செலுத்தினான். பீமன் யானைக் கூட்டத்தில் நுழைந்து அனைத்து மிருகங்களையும் வீழ்த்தினான். தொடர்ந்து பெரிய அளவில் போர் புரிந்த பீமன், துரியோதனனின் தம்பியர் எட்டு பேரைக் கொன்றான்.
பீமனுக்கு எதிராக துரியோதனன் போர் செய்யும்போது, ஒரு அம்பு பீமனின் நடுமார்பில் அடித்து, அதன் வேகத்தால் பீமன் மயங்கி உட்கார்ந்தான். தகப்பனாரின் நிலைமையைக் கண்டு கடோற்கஜனுக்கு கோபமேற்பட்டு பெரும்போர் துவங்கினான். அந்தப் போரை கௌரவர் படையினால் தாங்க முடியவில்லை. அதைப் பார்த்த பீஷ்மர், “இந்த அரக்கனோடு இன்று நான் போர் செய்ய முடியாது. நம்முடைய படையும் களைத்துவிட்டது. சூரியன் மறையும் காலமும் வந்துவிட்டது. அரக்கனுக்கோ இருட்டே பலம் தரும். நாளைய தினம் பார்போம்” என்று துரோணருக்கு சொல்லிவிட்டு படையை திருப்பினார்.
துரியோதனன் தன் தம்பியர் எட்டு பேரை இழந்த துக்கத்தினால் கண்களில் நீர் ததும்பப் பாசறையில் உட்கார்ந்து ஆழ்ந்து சிந்தித்தான்.
நிகழ்ந்த முக்கிய மரணங்கள்
[தொகு]- துரியோதனனின் தம்பியர் எட்டு பேர்
- சகுனியின் மகன்
போர்க்களத்துக்கு வெளியே நிகழ்ந்த நிகழ்வுகள்
[தொகு]போரில் நடந்த நிகழ்ச்சிகளை சஞ்சயன் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த திருதராட்டிரன் மிகவும் வருந்திப் புலம்பினான். அதைக்கேட்ட சஞ்சயன், “அரசே! இந்த அநியாயம் உமது காரியமே அல்லவா? மனக்கலக்கமடையாமல் உறுதியான மனத்துடன் நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும்” என்றான். “விதுரனுடைய வாக்கியங்கள் நிச்சயமாகி வருகின்றன” என்று திருதராஷ்டிரன் சொல்லிக் கொண்டு பெருந்துயரத்தில் மூழ்கினான்.
உசாத்துணை
[தொகு]சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.