அதிரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அதிரதன் (अधिरथ) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் கர்ணனின் வளர்ப்பு தந்தையாகும். தேரோட்டத்தில் சிறந்தவன். அங்க தேசத்தின் மன்னன் எனவும் சிலர் கூறுவர்.சாந்தனு மற்றும் திருதராட்டிரன்ஆகிய குரு குல மன்னர்களுக்கு தேரோட்டியாக பணி புரிந்தவன்.

கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடைப்பெட்டியை காண்கிறாள் அதிரதனின் மனைவி ராதே. அதனை பிரித்து உள்ளே காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு கர்ணன் எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள். போர்கருவிகளில் பயிற்சிபெற மகனை அத்தினாபுரம் அனுப்புகிறான் அதிரதன். அங்கு கர்ணனுக்கு துரியோதனனுடன் நட்பு ஏற்படுகிறது.மேற்கோள்கள்[தொகு]

  • "வியாசர்விருந்து" இராசாசி (தமிழ்)
  • A Dictionary of Hindu Mythology & Religion by John Dowson (ஆங்கிலம்)
  • Laura Gibbs, Ph.D. Modern Languages MLLL-4993. Indian Epics. Adhiratha(ஆங்கிலம்)
  • அதிரதன்(ஆங்கிலம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரதன்&oldid=1549545" இருந்து மீள்விக்கப்பட்டது