உள்ளடக்கத்துக்குச் செல்

லோமசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோமசர்
வேறு பெயர்கள்ரோமசர்[1]
வகைமுனிவர்
நூல்கள்மகாபாரதம், புராணங்கள்

லோமசர் (Lomasha (சமக்கிருதம்: लोमश) இந்து சமயப் புராணங்கள் மற்றும் மகாபாரதம் குறிப்பிடும் முனிவர்களில் ஒருவர். 12 ஆண்டு வன வாசத்தின் போது பாண்டவர்கள்ன் மனக்கவலையை நீங்கிட லோமச முனிவர் தருமருக்கு நல்லுபதேசங்கள் செய்தார்.[2] பத்ம புராணம்[3] மற்றும் ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணங்களில்[4].[5] லோமச முனிவர் தொடர்பான குறிப்புகள் உள்ளது.

மகாபாரதத்தில்

[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் லோமச முனிவர் இந்திரனுக்கு மரியாதை செலுத்த இந்திரலோகத்திற்குச் சென்ற போது, அரியணையில் இந்திரனுடன் அருச்சுனனும் வீற்றிருப்பதைக் கண்டார். அப்போது இந்திரன், அருச்சுனன் தனது மகன் என்றும் காம்யக வனம் சென்று பிற பாண்டவர்களுக்கு மன உறுதியுடன் இருக்குமாறு இந்திரன் லோமச முனிவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க லோமச முனிவர் தருமரை சந்தித்து இந்திரன் கூறிய செய்தியினை தெரிவித்தார்,. மேலும் பிற பாண்டவர்களுடன், லோமச முனிவரும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் போது லோமச முனிவர் தருமருக்கு தர்மத்தின் தன்மையை எடுத்துக் கூறினார். தர்மத்தை கடைபிடிக்காதவர்கள் இறுதியில் அழிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.மேலும் அகஸ்தியர், இராமர், பரசுராமர் மற்றும் ரிஷ்யசிருங்கர், தேவ-அசுரப் போர் போன்ற வரலாறுகளை பாண்டவர்களிடம் எடுத்துக் கூறினார்.பாண்டவர்களுடன் லோமச முனிவரும் சேர்ந்து நைமிசாரண்யம், கயை மற்றும் கங்கை ஆறு போன்ற இடங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, அதன் புனிதத் தன்மைகளை எடுத்துக் கூறினார்..

மேலும் லோமச முனிவர் இந்திரன், விருந்திராசூரனை வதைத்த கதையைக் எடுத்துக் கூறினார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mani, Vettam (2015-01-01). Puranic Encyclopedia: A Comprehensive Work with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass. pp. 457. ISBN 978-81-208-0597-2.
  2. Bhatt, G. P.; Shastri, J. L.; Deshpande, N. A. (1992). The Skanda Purana Part 1: Ancient Indian Tradition And Mythology Volume 49 (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0966-6.
  3. Makarand Joshi. Padma Purana Vol 04 Bhumi And Svarga Khanda Pages 1241 1563 ENG Motilal Banarsidass 1990. pp. 1413–1422.
  4. Books, Kausiki (2021-10-24). Skanda Purana: Maheswara Khanda: Kedara Khanda: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 157.
  5. Books, Kausiki (2021-10-24). Skanda Purana: Maheswara Khanda: Kedara Khanda: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 177.
  6. Klostermaier, Klaus K. (2006-01-01). Mythologies and Philosophies of Salvation in the Theistic Traditions of India (in ஆங்கிலம்). Wilfrid Laurier Univ. Press. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88920-743-1.
  7. Valmiki; Vyasa (2018-05-19). Delphi Collected Sanskrit Epics (Illustrated) (in ஆங்கிலம்). Delphi Classics. p. 3189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78656-128-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோமசர்&oldid=4126103" இலிருந்து மீள்விக்கப்பட்டது