ஆசிரமவாசிக பருவம்

ஆசிரமவாசிக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினைந்தாவது பருவம். தருமபுத்திரனின் முதல் பதினைந்து ஆண்டுக்கால நல்லாட்சியும், அதன் பின் திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரர் ஆகியோர் துறவு வாழ்வை மேற்கொண்டு காட்டுக்குச் செல்வதும் இந்தப் பருவத்தில் சொல்லப்படுகின்றன.
அமைப்பு[தொகு]
இப்பருவம் பின்வரும் மூன்று துணைப் பருவங்களைக் கொண்டது:
- ஆசிரமவாச பருவம்
- புத்திரதர்சன பருவம்
- நாரதகமன பருவம்
இவற்றுள் முதல் துணைப்பருவம் தருமரின் 15 ஆண்டுக்கால நல்லாட்சி பற்றியும், திருதராட்டிரன் முதலானோர் காட்டுக்குச் செல்வது பற்றியும் கூறுகிறது. இரண்டாவது துணைப்பர்வம், பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று திருதராட்டிரன் முதலானோரைச் சந்திப்பது பற்றியும், வியாசர் அனைவருக்கும் போரில் இறந்து போனவர்களை வரவழைத்துக் காட்டியது பற்றியும் கூறுகிறது. இறுதித் துணைப் பர்வத்தில், திருதராட்டிரன், குந்தி, காந்தாரி ஆகியோரின் இறப்புப் பற்றியும், நாரதர் துயரில் வாடுவோருக்கு ஆறுதல் சொல்வதும், தருமர் இறுதிக் கடன்களைச் செய்வதும் அடங்குகின்றன.
குறிப்புகள்[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- அசுவமேத பருவம் (முந்தியது)
- மௌசல பருவம் (அடுத்தது)