ஜரத்காரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாககன்னியான ஜரத்காரு எனும் மானசா தேவியின் மடியில் ஆஸ்திகர்
ஜரத்காரு முனிவர் தன் மனைவி நாககன்னி ஜரத்காருவை விட்டுச் செல்தல்

ஜரத்காரு (Jaratkaru), இந்து தொன்மவியலின்படி, முனிவரான இவர், தன் பெயரைக் கொண்ட வாசுகியின் தங்கையான நாககன்னி ஜரத்காருவை, தன் முன்னோர்களின் வேண்டுதலின்படி மணந்தவர்.[1] ஜரத்காரு முனிவருக்கும் நாககன்னியான ஜரத்காருக்கும் பிறந்தவரே ஆஸ்திகர்.

தன் தாயின் (நாககன்னி ஜரத்காரு), சகோதர்களான நாகர்களை குறிப்பாக தட்சகனை, ஜனமேஜயன் நடத்திய வேள்வித்தீயில் வீழ்ந்து இறப்பதிலிருந்து ஆஸ்திகர் காத்தருளினார். ஜரத்காருவைப் பற்றிய குறிப்புகள் புராணங்கள் மற்றும் மகாபாரதம் ஆதி பருவத்தில் காணப்படுகிறது.[2]

அரித்துவார் அருகே உள்ள சிறு மலை மீது நாக்கன்னி ஜரத்காருவை மானசா தேவி என்ற பெயரில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்[3][4]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! ஆதிபர்வம் - பகுதி 15
  2. ஆஸ்திகர்
  3. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. பக். 348–9. ISBN 0-8426-0822-2. 
  4. ஜரத்காரு

மேற்கோள்கள்[தொகு]

  • J. A. B. van Buitenen; Johannes Adrianus Bernardus Buitenen (15 February 1980). The Mahabharata, Volume 1: Book 1: The Book of the Beginning. University of Chicago Press. ISBN 978-0-226-84663-7. 
  • McDaniel, June (2004). Offering Flowers, Feeding Skulls: Popular Goddess Worship in West Benegal. Oxford University Press, US. ISBN 0-19-516790-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜரத்காரு&oldid=2577435" இருந்து மீள்விக்கப்பட்டது