தர்மவியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மவியாதர், மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் துவைத வனத்தில் வனவாசத்தில் இருந்த போது, மார்காண்டேய முனிவர் தர்மருக்கு, வேடனும், இறைச்சி வணிகரும் அறநெறியுடன் வாழும் தர்மவியாதனின் ஆன்மீக ஒழுக்கம் குறித்து தர்மருக்கு கதையாக கூறுகிறார்.[1][2] வேடன் மற்றும் இறைச்சி வணிகருமாக இருப்பினும் தர்மவியாதன் தன் வாழ்க்கையில் அற்நெறிகளுடன் வாழ்ந்தார். தவம் புரிந்தும், சினத்தை கைவிடாத கௌசிகர் எனும் முனிவருக்கு, தர்மவியாதனிடம் அண்டி அறநெறிகளை உபதேசிக்கப்பட்டார். தரும வியாதர் செய்த அற உபதேசங்களை வியாத கீதை என்பர்.[3][4]

வரலாறு[தொகு]

கௌசிகர் எனும் முனிவர் பெருந்தவத்திலிருந்து எழுந்திருக்கையில், மரத்திலிருந்த கொக்கு அவர் மீது எச்சமிட்டது. இதனால் சினமடைந்த முனிவர் தன் பார்வை நோக்கால் கொக்கை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் அருகிலிருந்த ஊரூக்குச் சென்று ஒரு வீட்டை அணுகி தனக்கு அன்னதானம் செய்யக் கூவினார். வீட்டில் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த பெண் சிறிது காத்திருக்க வேண்டினார். ஆனால் சினமடைந்த முனிவரோ தான் யார் எனத்தெரியுமா எனக்கோபத்துடன் கத்தினார். அதற்கு அப்பெண்மணி என்னை கொக்கு என்று நினைத்துக் கொண்டீர்களா என மறுமொழி கூறினார். இதனைக் கேட்ட முனிவருக்கு, தன் தவ வலிமையால் கொக்கை எரித்த விடயம் இப்பெண்மணி எவ்வாறு தெரிந்தது எனக்கேட்டதுடன், தன் தவவலிமையின் பலத்தின் குறைபாட்டை எண்ணிக் கூனிக்குறுகினார். மேலும் தனக்கு நல்லறம் உபதேசிக்கும் படி அப்பெணிடம் வேண்டினார். அப்பெண்னோ மிதிலை நகரத்தில் இறைச்சி விற்கும் வியாதன் என்பரை அணுகி உபதேசம் பெற்றுக் கொள்ளும் படி முனிவரிடம் கூறினார். அவ்வாறே கௌசிக முனிவரும் இறைச்சிக் கடைக்காரர் வியாதரை அணுகி தர்ம உபதேசங்களை பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahābhārata - Episode 35 - Story of Dharma-vyādha and the Goṣa-yātra Idea
  2. Agarwal 2002, p.49
  3. Vyadha Gita
  4. Mahabharata Metaphors: Dharmavyadha imparts the Essence of the Vedas to Kaushika

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மவியாதன்&oldid=3802375" இருந்து மீள்விக்கப்பட்டது