உள்ளடக்கத்துக்குச் செல்

விராட பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைரந்திரியை காமவெறியுடன் நெருங்கும் கீசகன்


மகாபாரதத்தின் 18 பருவங்களுள் நான்காவது விராட பருவம். இப்பருவத்தில், 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில், தருமர் விராட மன்னருடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக கங்கன் எனும் பெயரிலும், திரௌபதி, விராட இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி என்ற பெயரிலும், பீமன் விராட அரண்மனை சமையல் கலைஞராக வல்லபன் எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் அரண்மனை பசுக்களை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் வாழ்ந்தனர்.

விராட பருவச் சம்பவங்கள்[தொகு]

சைரந்திரி எனும் திரௌபதி மேல் காமம் கொண்ட கீசகனை பீமன் கொல்லுதல், விராட நாட்டின் எல்லைப்புறத்தை முற்றுகையிட்ட திரிகர்த்தர்களை வல்லபன் வேடத்தில் இருந்த வீமன் விரட்டி அடித்தல், கௌரவர்கள் விராட நாட்டில் புகுந்து பசுக்களைக் கவர்ந்து போதல், பிருகன்னளை வேடத்தில் இருந்த அருச்சுனன் உத்தரனுடன் கௌரவர்களை போரில் விரட்டியடித்தல், விராடனின் மகள் உத்தரையுடன் அபிமன்யுவின் திருமணம் ஆகியன விவரிக்கப்படுகிறது.

விராட பருவம் கேட்பதன் சிறப்பு[தொகு]

பயிர்த்தொழில் சிறக்க, மழை பொழிய வேண்டி ஊர்களில், பாகவதர்கள் மூலம் விராட பருவத்தை சொல்லக் கேட்பது தமிழ்நாட்டு இந்து மக்களின் தொல்நம்பிக்கையாகும்.

உப பர்வங்கள்[தொகு]

  • பாண்டவ பிரவேச பருவம்
  • சமய பாலன பருவம்
  • கீசக வதை பருவம்
  • கோ கிரகண பருவம்
  • வைவாகிக பருவம்

பிரபல கலாசாரத்தில்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராட_பருவம்&oldid=3832529" இலிருந்து மீள்விக்கப்பட்டது