புரோசனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோசனன் (Purochana) (சமக்கிருதம்: पुरोचन) மகாபாரதம் கூறும் குரு நாட்டின் கட்டிடக் கலைஞன் ஆவான். சகுனியின் ஆலோசனையின் பேரிலும், துரியோதனனின் ஆணைப் படியும் [1], பாண்டவர்களை கொல்ல வாரணாவதம் எனும் ஊரில் அரக்கு மாளிகையை நிறுவியவனும் ஆவான்.

பாண்டவர்கள் வாரணாவதத்தில் உள்ள அரக்கு மாளிகைக்கு சென்று தங்குவதற்கு முன்னர், விதுரன், தருமரை தனியே அழைத்து, காடு பற்றி எரியும் போது, எலிகள் வளையில் மறைந்து உயிர் பிழைத்துவிடும் எனப் பிதற்றும் மொழியில் பேசினார். [2]விதுரர் பிதற்றியதன் உண்மையை அறிந்த தருமன், புரோசனன் அரக்கு மாளிகைக்கு தீயிட்டு அழிக்கும் முன்னரே, வீமனை விட்டு அரக்கு மாளிகைக்கு தீ வைத்து, சுரங்கப் பாதை வழியாக குந்தி மற்றும் பாண்டவர்கள் தப்பினர்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் தீயிட்டு அழிக்க நினைத்த புரோசனன், தானே தீயில் சிக்கி கருகி இறந்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புரோசனனிடம் பேசிய துரியோதனன் - ஆதிபர்வம் பகுதி 146
  2. விதுரரின் பிதற்றல் மொழி - ஆதிபர்வம் பகுதி 147

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோசனன்&oldid=3792570" இலிருந்து மீள்விக்கப்பட்டது