ருக்மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருஷ்ணனுடன் ருக்மணி தேவி அரசு அருங்காட்சியகம், சென்னை, இந்தியா

ருக்மிணி (Rukmini) விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார்.

ருக்மணியின் சகோதரன் ருக்மி, சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தன் சகோதரி ருக்மணியைக் கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தி சொல்லியனுப்பினார். நகர மக்கள் ருக்மியின் செயலால் வருத்தமுற்று ருக்மணியின் நிலையை எண்ணி வருந்தி அழுதபடி இரவைக் கழித்தனர்.

செய்தி பெற்று கவலையுற்ற கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு கிளம்பினார். மறுநாள் ருக்மணி, அம்பிகை பார்வதி தேவியின் திருக்கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டி பிரார்த்தித்து திரும்பும் வழியில், கிருஷ்ணர், ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றி கொண்டு திரும்பினார். [1] ருக்மணி லட்சுமி தேவியின் அம்சமாகக் கூறப்படுகின்றார்.

ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.

ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னன் ஆவார். இவருக்கும் ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். [2]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீமந்நாராயணீயம்; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்; பக்கம்; 398-407
  2. தீபம் மே 02 2016 இதழ் பக்கம் 65
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மணி&oldid=2226385" இருந்து மீள்விக்கப்பட்டது