பத்திரை (கண்ணன் தேவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

பத்திரை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஏழாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]

வாழ்க்கை[தொகு]

கேகய நாட்டின் இளவரசி என்பதால், இவள் கைகேயி எனப்படுகின்றாள். திருட்டகேது மற்றும் குந்தியின் சகோதரியான சுருதகீர்த்தி ஆகியோரின் மகள் இவள்.[2][3] மணத்தன்னேற்பில் இவள் கண்ணனைத் தன் நாயகனாக வரித்துக் கொண்டாள்.[4]

சங்கிராமசித்து, பிருகச்சேனன், சூரன், பிராகரணன், ஆர்சித்து, சயன், சுபத்திரன், வாமன், ஆயுர், சத்தியகன் என மித்திரவிந்தைக்குப் பத்து மைந்தர் என்கின்றது பாகவதம்[5][6] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[7] [8]

பத்திரா கல்யாணம்[தொகு]

"பத்திரா கல்யாணம்" என்னும் நூல் தெலுங்கில், கலாநிதி.கே..வி.கிருஷ்ணகுமாரி என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. பத்திரையின் அழகு, காதல், அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த திருமணம் என்பவற்றை அந்நூல் அழகுற வர்ணிக்கின்றது.[9]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  2. Prabhupada. "Bhagavata Purana 10.58.56". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  3. Prabhupada. "Bhagavata Purana 9.24.38". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2009-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  4. Aparna Chatterjee (December 10, 2007). "The Ashta-Bharyas". American Chronicle. Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  6. Prabhupada. "Bhagavata Purana 10.61.17". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  7. Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  8. Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
  9. Bhadra Kalyanam by Dr. K. V. Krishna Kumari. Archive. org. http://archive.org/details/BhadraKalyanamByDr.K.V.KrishnaKumari-ReadingByProf.V.Viswanadham_651. பார்த்த நாள்: 9 February 2013. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரை_(கண்ணன்_தேவி)&oldid=3801534" இலிருந்து மீள்விக்கப்பட்டது