உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவன் (விஷ்ணு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதவன் (Madhava) (சமக்கிருதம்: माधव) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் மாதவன் எனும் பெயர், 72, 167 மற்றும் 735-வதாக வருகிறது. மேலும் மகாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ணரை மாதவன் என அருச்சுனன் அழைக்கிறான்.

பகவத் கீதையின் முதல் அத்தியாயம், 36வது சுலோகத்தில், மகாலட்சுமியின் கணவரான மாதவனே என விளித்து, போர்க் களத்தில் எதிரில் நிற்கும் நம் உறவினர்களையும், குருமார்களையும் கொல்வதால் என்ன பயன்? என விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை நோக்கி அருச்சுனன் கேட்கிறான். (Bhagavad-Gita 1.36)

பெயர்க் காரணம்

[தொகு]

அனைத்து நிதிகளின் அதிபதி என்பதாலும், மது எனும் அரக்கனை கொன்றதாலும் விஷ்ணுவிற்கு மாதவன் எனப் பெயராயிற்று.[1]

கருப்பு நிற மாதவனின் புகைப்படம், மண்டி, இமாசலப் பிரதேசம்

மாதவன் என்பதற்கு மகாலட்சுமியை மணந்தவர் என்றும், மது வித்தையின் மூலம் அறியத் தக்கவன் எனவும், ஆதிசங்கரர் தனது விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைக் காலம் முதல் ஒடிசாவில் மாதவனுக்கு நீல-மாதவன், இராதா-மாதவன், துர்கா-மாதவன் போன்ற பெயர்களில் வழிபாடுகள் இருந்து வருகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maharishi Mahesh Yogi on the Bhagavad-Gita, a New Translation and Commentary, Chapter 1-6. Penguin Books, 1969, p 37 (v 14)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவன்_(விஷ்ணு)&oldid=3590971" இலிருந்து மீள்விக்கப்பட்டது