அக்ரூரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்ரூரர் (AKRÛRA) யாதவ குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணி கிளைக்குலத்தவர். இவர் கிருஷ்ணரின் சித்தப்பா முறையாவார். கம்சனின் அரசவையில் அமைச்சராக இருந்தவர். கம்சனின் உத்தரவுப் படி, பிருந்தாவனத்திலிருந்த கிருஷ்ணரையும், பலராமரையும், மதுரா அரண்மனைக்கு அழைத்துச் சென்றவர். கம்சனின் மறைவிற்குப் பின்னர் கிருஷ்ணரின் ஆலோசகராக இருந்தவர்.[1] அக்ரூரர், பாண்டவர்களுக்காக திருதராட்டிரரிடம் தூது சென்றவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishna and Balarâma Leave for Mathurâ
  2. Akrûra's Mission in Hastinâpura
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரூரர்&oldid=3801500" இலிருந்து மீள்விக்கப்பட்டது