உள்ளடக்கத்துக்குச் செல்

மித்திரவிந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

மித்திரவிந்தை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஐந்தாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]


வாழ்க்கை

[தொகு]

பாகவதம், இவள் குந்தியின் தமக்கை இராசாத்தி தேவி்யினதும், அவந்தி நாட்டரசன் ஜெயசேனனதும் மகள் என்கின்றது. இவளது தமையர்களான விந்தன், அனுவிந்தன் துரியோதனனின் தோழர்கள் என்றும் அது சொல்கின்றது.[2][3] விஷ்ணு புராணத்தில் மித்திரவிந்தை, "சைப்பியை" ( சிபி வம்சத்தவள்) என்ற பெயரால் அவள் சுட்டப்படுகின்றாள். அரி வம்சம் கூறுவதன் படி, அவள் சிபி மன்னனின் மகளான "சுதத்தை".[4]


பாகவதத்தில், மித்திரவிந்தையின் கண்ணனுடனான திருமணம், சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவளது குடும்பத்தவர், அவளைத் துரியோதனனுக்கு மணக்க முடிவு செய்திருந்ததாகவும், அவளோ கண்னனைக் காதலித்ததாகவும், அவளுக்கு வைக்கப்பட்ட மணத்தன்னேற்பில், கண்ணன் அவளைக் கவர்ந்து சென்றதாகவும் பாகவதம் சொல்கின்றது.[5][2]

இன்னொரு கதையில், பலராமரின் ஆணைப்படி, அவந்தி நாடு கௌரவருடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால், கண்ணன் தன் மைத்துனியான மித்திரவிந்தையை மணக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அவன் சுபத்திரையை அழைத்துச் சென்று அவள் மனமறிந்து, மித்திரவிந்தையின் சம்மதத்துடன் அவளைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.[6]

விருகன், கர்சன், அண்ணிலன், கிரீத்திரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன், வக்கினி, சுதி எனும் பதின்மர் மித்திரவிந்தையின் மைந்தர்களாகச் சொல்லப்படுகின்றனர்.[7][8] சங்கிராமசித்து முதலான பல மைந்தர்கள் அவளுக்கு இருந்ததாக விஷ்ணு புராணம் சொல்கின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[9] [10]

மேலும் பார்க்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-0822-0.
  2. 2.0 2.1 Prabhupada. "Bhagavata Purana 10.58". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  3. Prabhupada. "Bhagavata Purana 9.24.39". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2009-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  4. 4.0 4.1 Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. pp. 79–82. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
  5. V. R. Ramachandra Dikshitar (1995). The Purana Index. Motilal Banarsidass Publishe. pp. 705–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1273-4. பார்க்கப்பட்ட நாள் 7 February 2013.
  6. "Discussions at Dwaraka". Protagonize.com of TauntMedia.com. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
  7. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  8. Prabhupada. "Bhagavata Purana 10.61.16". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  9. Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  10. Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்திரவிந்தை&oldid=3801532" இலிருந்து மீள்விக்கப்பட்டது