நர-நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர நாராயணர்கள்
NarNarayan-Kalupur.jpg
நர-நாராயணர்கள், சுவாமிநாராயணன் கோயில், அகமதாபாத், இந்தியா
தேவநாகரிनर-नारायण
சமசுகிருதம்nara-nārāyaṇa
வகைதிருமாலின் அவதாரம்
இடம்பத்ரிநாத்

நர-நாராயணன் (Nara-Narayana) (சமக்கிருதம்: नर-नारायण; nara-nārāyaṇa) இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தர்மதேவதை மற்றும் மூர்த்தி என்பவர்களுக்கு இரட்டை மகன்களாக தோன்றினார்கள்.இவர்கள் இருவரும் பகவான் விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

இவர்கள் முக்கிய பணி தவத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதும் தன் தவத்தின் மூலம் உலகை பரிபாலனம் செய்வதுமே ஆகும்.

இந்து சமய காவியமான மகாபாரதம், கிருஷ்ணரை நாராயணனாகவும், அருச்சுனனை நரனாகவும் குறிக்கிறது. பாகவத புராணத்தில் நர-நாராயணர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

சுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.

மகாபாரத காவியத்தில், அருச்சுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[1]

மகாபாரதம், அரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் நாராயணன் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார்கள்.[2]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nara Narayana
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நர-நாராயணன்&oldid=3476727" இருந்து மீள்விக்கப்பட்டது