உள்ளடக்கத்துக்குச் செல்

நம்மாழ்வார் (ஆழ்வார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பராங்குச நாயகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நம்மாழ்வார்
பிறப்புவைகாசி விசாகம்
ஆழ்வார் திருநகரி
தத்துவம்விசிஷ்டாத்வைதம்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்திருவிருத்தம், திருவாசிரியம்,
பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)மதுரகவியாழ்வார், நாதமுனி

நம்மாழ்வார் (Nammalvar) வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் 'மாறன் சடகோபன்' என்ற பெயரில் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார்.[1][2] நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.[3]

வரலாறு

[தொகு]
நம்மாழ்வார்

திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்கு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43-ஆவது நாளில் பிறந்தார்.[4] இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் "சடகோபன்" என்றும் மாறன் சடகோபன் என அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப் பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஓர் ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன் மதுரகவி ஆழ்வார் கேட்ட "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" கேள்விக்கு "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார்.[5]

நூல்கள்

[தொகு]

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாகப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்தத் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

பிறபெயர்கள்

[தொகு]

கீழ்கண்ட 35 பெயர்கள் அனைத்தும் நம்மாழ்வாரின் பிறபெயர்களாகும்


  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வேதம் தமிழ் செய்த மாறன்
  6. வகுளாபரணன்
  7. குருகைப்பிரான்
  8. குருகூர் நம்பி
  9. திருவாய்மொழி பெருமாள்
  10. பெருநல்துறைவன்
  11. குமரி துறைவன்
  12. பவரோக பண்டிதன்
  13. முனி வேந்து
  14. பரப்ரம்ம யோகி
  15. நாவலன் பெருமாள்
  16. ஞான தேசிகன்
  17. ஞான பிரான்
  18. தொண்டர் பிரான்
  19. நாவீரர்
  20. திருநாவீறு உடையபிரான்
  21. உதய பாஸ்கரர்
  22. வகுள பூஷண பாஸ்கரர்
  23. ஞானத் தமிழுக்கு அரசு
  24. ஞானத் தமிழ் கடல்
  25. மெய் ஞானக் கவி
  26. தெய்வ ஞானக் கவி
  27. தெய்வ ஞான செம்மல்
  28. நாவலர் பெருமாள்
  29. பாவலர் தம்பிரான்
  30. வினவாது உணர்ந்த விரகர்
  31. குழந்தை முனி
  32. ஸ்ரீவைணவக் குலபதி
  33. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  34. மணிவல்லி
  35. பெரியன்

கண்ணிநுண்சிறுத்தாம்பு

[தொகு]

கண்ணிநுண்சிறுத்தாம்பு, வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் 11 பாசுரங்களைக் கொண்டது. மதுரகவியாழ்வாரால் நம்மாழ்வாரை வணங்கிப் பாடப்பட்ட இந்நூல் நாலாயிர திவ்யபிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆன்மிகம், ed. (31 அக்டோபர் 2014). ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம். தினமணி.
  2. 12 ஆழ்வார்கள், ed. (09 பிப்ரவரி 2011). நம்மாழ்வார். தினமலர். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. Nammalvar
  4. https://books.google.co.in/books?id=4dVRvVyHaiQC&pg=PA278&redir_esc=y#v=onepage&q&f=false
  5. நம்மாழ்வார், அ.சீனுவாச ராகவன், சாகித்திய அக்கதமி
  6. நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்மாழ்வார்_(ஆழ்வார்)&oldid=3958276" இலிருந்து மீள்விக்கப்பட்டது