காலயவனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காலயவனன் என்பவர் மகாபாரதத்தில் வருகின்ற கதைமாந்தராவார்.[1] இவர் கார்கியா எனும் பிராமணனுக்கு சிவபெருமான் வரத்தால் பிறந்தவர். யவன அரசரிடம் வளர்ந்து கிருஷ்ணனை அழிக்க சென்றார். யாதவர்களால் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அரக்கன் என்பதால் கிருஷ்ணன் தந்திரம் செய்து முகுந்தன் என்ற அரசினை வைத்துக் கொன்றார்.[2]

கதை[தொகு]

கார்கியா எனும் பிராமணரை யாதவர்கள் அவமானப்படுத்தினர். அதனால் கோபம் கொண்ட பிராமணர், அவர்களை அழிக்க தனக்கு ஒரு மகன் வேண்டுமென நினைத்தார். அதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து அந்த வரத்தினையும் பெற்றார். இவருக்குப் பிறந்த மகன் பலசாலியாக இருந்தான். அவனை யவன அரசர் ஒருவர் இளவரசனாக்கி கலைகளைக் கற்றுத் தந்தார். அவனுக்கு காலயவனன் என்று பெயரிட்டனர். சில காலத்தில் அரசனானதும் தன்னைவிட பலசாலியான அரசனைத் தேடி வெற்றிக் கொல்ல வேண்டுமென நினைத்தான். அப்போது கிருஷ்ணனினைப் பற்றி கேள்விப்பட்டு போருக்கு சென்றான். யாதவர்கள் குலத்தினரால் அவனை வெல்ல முடியாது என்பதை யாதவரான கிருஷ்ணர் அறிந்தார். அவனை இருண்ட குகையொன்றுக்கு அழைத்துவந்தார். அங்கு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் எனும் அரசனை காலயவனன் எழுப்பினார். தேவர்களுக்கு போரில் உதவி செய்து களைப்புற்றிருந்த முசுகுந்தனுக்கு ஆழ்ந்து தூக்கும் வரத்தினையும், அவ்வாறு தூங்குபவனை எழுப்புவன் எரிந்து சாம்பலாவான். என்றும் வரமளித்திருந்தனர். இதுதெரியாமல் எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Dinakaran - துனபஙகள் போககும துவாரகை மன்னன்".
  2. http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=125&pno=204
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலயவனன்&oldid=3063284" இருந்து மீள்விக்கப்பட்டது