உக்கிரசிரவஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உக்கிரசிரவஸ், மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல்

உக்கிரசிரவஸ் அல்லது சௌதி அல்லது சூதர் (Ugrashravas) (Ugrasravas), (Sauti) (Suta Pauranika) (சமஸ்கிருதம்: उग्रश्रवस, சத்திரியத் தந்தைக்கும், அந்தணப் பெண்னுக்கும் பிறந்த சூதர் குலத்தைச் சார்ந்தவர். [1] ரோமஹர்சணர் என்ற சூத பௌராணிகர் இவரது தந்தையாவர். [2] இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் சூதர் என்ற பெயர் இருந்தது. [3] இதிகாச புராணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணியினைச் செய்பவர். இவர் தம் குல வழக்கப்படி, புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற ஸ்மிருதிகளை மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குபவர்[4][5].

வேதவியாசர் இயற்றிய மகாபாரதம் இதிகாசத்தை, பாம்பு வேள்விக்குப் பின் ஜனமேஜயனுக்கு, வைசம்பாயனர் எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் குருச்சேத்திரம் போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, நைமிசாரண்யத்திற்கு வந்தார் சௌதி. நைமிசாராண்யம் காட்டில் சௌனகர் மகரிஷி தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ் என்ற சௌதி எடுத்துக் கூறினார்.[6]

மகாபாரத இதிகாசம், வைசம்பாயனர், ஜனமேஜயனுக்கு கூறுவதாக அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suta, Sauti, Suta Putra". Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-30.
  2. aka: Sūta; 6 Definition(s)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-30.
  4. Winternitz, Moriz; V. Srinivasa Sarma (1996). A History of Indian Literature, Volume 1. Motilal Banarsidass Publ. p. 303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0264-3.
  5. Hiltebeitel, Alf (2001). Rethinking the Mahābhārata: a reader's guide to the education of the dharma king. University of Chicago Press. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-34054-8.
  6. Jarow, Rick (2003). Tales for the dying: the death narrative of the Bhāgavata-Purāṇa. SUNY Press. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-5609-5.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிரசிரவஸ்&oldid=3725096" இலிருந்து மீள்விக்கப்பட்டது