தந்திரிபாலன்
தந்திரிபாலன், மகாபாரத இதிகாசத்தில் 12 ஆண்டுகள் வன வாசத்தை முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்த திரௌபதியுடன் மத்சய நாட்டின் மன்னர் விராடனின் அரண்மனையில் மாறு வேடத்தில் பணியில் சேர்ந்தனர். அதில் சகாதேவன் தந்திரிபாலன் எனும் பெயரில் அரண்மனை ஆநிரைகளை மேற்பார்வையிட்டு காக்கும் பணியில் சேர்ந்தார். [1][2]
திரௌபதி & மற்ற பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்
[தொகு]தருமர் அந்தணர் வடிவத்தில் கங்கன் எனும் பெயரில் விராட மன்னரின் அரசவை உறுப்பினராகவும் திரௌபதி விராட நாட்டின் பட்டத்து இராணி சுதோஷ்ணையின் கூந்தல் அலங்காரம் செய்ய சைரந்திரி எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நாட்டியம் கற்றுத் தர பிருகன்னளை எனும் பெயரிலும், வீமன் அரண்மனை சமையல்காரராக வல்லபன் எனும் பெயரிலும், நகுலன் அரண்மனைக் குதிரைகளுக்கு பயிற்சி தரும் பணியில் கிரந்திகன் எனும் பெயரிலும் விராட நாட்டு அரண்மனைப் பணிகளில் சேர்ந்தனர்.