உலுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான மகாபாரதத்தில் அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன் மணிப்பூரில் இருந்தபோது, நாக கன்னிகை உலுப்பி அவன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனை மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.

அருச்சுனன்மற்றும் சித்திராங்கதாவின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுப்பி&oldid=1683224" இருந்து மீள்விக்கப்பட்டது