கடோற்கஜன்
கடோற்கஜன் மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரம் ஆவான். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.