உள்ளடக்கத்துக்குச் செல்

கசர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

கசர்கள் (Khasas) மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் உள்ள நேபாளம், காஷ்மீரம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் வடமேற்கு இந்தியா போன்ற இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்த இந்தோ ஆரிய மக்கள் ஆவார்.

மகாபாரதக் குறிப்புகள்

[தொகு]

சீனர்கள், பகலவர்கள், யவனர்கள், சகர்கள், சவரர்கள், கிராதர்கள், சிங்களவர்கள் போன்ற மிலேச்சர்களுடன் சேர்த்து கசர்களையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.[1]

குருச்சேத்திரப் போரில்

[தொகு]

குருச்சேத்திரப் போரில் கச நாட்டுப் படைவீரர்கள், காம்போஜர்கள், சகர்கள் போன்ற மிலேச்சர்களுடன் இணைந்து, கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக நீண்ட வாட்களுடன் போரிட்டனர். (மகாபாரதம், உத்யோக பருவம், 5-161,162)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசர்கள்&oldid=4366718" இலிருந்து மீள்விக்கப்பட்டது