ஊர்வசி (அரம்பையர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்வசி இந்து தொன்மவியலில் வருகின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவார். இவர் அழகிலும் நாட்டியத்திலும் உயர்ந்தவர்.

புரூரவனை விட்டுப் பிரியும் ஊர்வசியின் சித்திரம் ராஜா ரவி வர்மா வரைந்தது

இவர் சந்திர குலத்தில் புரூரவசு‎வை காதலித்தாகவும், அதற்காக பூமியில் வசித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை, பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அருச்சுனனின் மீது காதல் கொண்டார். ஆனால் அருச்சுனன் இவரை ஏற்க மறுத்தமையால் அருச்சுனனை பெண்ணாகும் சாபமிட்டார்.[1]

தனது முற்பிறவியில், இவர் ஒரு பிராமண பெண்ணாக ‌இருந்தார். அவரின் தீய செயல்களால் ஒரு நாயாக பிறந்தார். ஒரு சமயம், அந்நாய் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால், அதன் மறுபிறவியில் ஊர்வசி என்ற அரம்பையாக தோன்றியது.

பிறப்பு[தொகு]

விவ்ரிசா-அஹிம்சா தம்பதியினருக்கு ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என நான்கு மகன்கள் பிறந்தனர். இமயமலைக்குச் சென்று வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்து தவத்தினை மேற்கொண்டனர். அவர்களின் தவத்தினைக் கலைக்க ரம்பாவையும், மன்மதனையும் இந்திரன் அனுப்பிவைத்தார். அவர்கள் தவமேற்றும் இடத்திற்கு வந்தபோது பூக்கள் பூப்பதும், செடிகொடிகள் செழுமையாவதும் ஏற்பட்டது. தவம் கலைத்து அங்குநடப்பதை கண்டார். உணர்ந்தார். மன்மதனை அருகில் அமரச்சொல்லி தன்னுடையத் தொடையில் ஒரு கொத்து மலர்களை திரித்தார். அந்த திரிபட்ட மலர் ஊர்வசி எனும் பெண்ணாக மாறியது. அவளே மிகச் சிறந்த அழகியாக இருப்பாள். இந்திரனுக்கு நான் தரும் பரிசாக கொடுங்கள் என்றார்.

இவற்றையும் காண்க[தொகு]

இந்திரன் காமதேனு கற்பக விருட்சம்

ஆதாரங்கள்[தொகு]

  1. உபபாண்டவம் கீற்று இணையதளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வசி_(அரம்பையர்)&oldid=3874591" இலிருந்து மீள்விக்கப்பட்டது