காமதேனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமதேனு
Batu Caves Kamadhenu.jpg
காமதேனு சிலை பத்து மலை, மலேசியா
அதிபதிபசுக்களின் தாய்
தேவநாகரிकामधेनु
சமசுகிருதம்Kāmadhenu
வகைதேவி
இடம்தேவ உலகம்
துணைகாசிபர்

காமதேனு (சமக்கிருதம்: कामधेनु, [kaːməˈd̪ʱeːnʊ], Kāmadhenu), என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும். இந்து தொன்மவியல் அடிப்படையில் கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக இந்த காமதேனு உயிரினம் சித்தரிக்கப்படுகிறது. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர்.

இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

தோற்றம்[தொகு]

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.

காமதேனுவுக்காக சண்டை[தொகு]

காதி என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர் பெரும் மன்னர். ஒருநாள் பிரம்மரிஷி வஸிஷ்டர் ஆசிரமத்திற்கு பெரும் படையுடன் வந்தார். மன்னரை மகிழ்விக்க வஸிஷ்டர் தேவலோக பசுவான காமதேனுவின் துனையால் வந்தோர் அனைவருக்கும் அறுசுவை உணவிட்டார். உண்டு மகிழந்த மன்னர் விஸ்வாமித்தரருக்கு காமதேனுவின் மகிமை புரிந்தது. அதனை தன்னுடன் கொண்டு செல்ல எத்தனித்தார். அப்போது வசிஸ்ஷடர் உத்தரவினை ஏற்று ஏராளமான படைகளை உருவாக்கி காமதேனு மன்னர் படையை எதிர்த்தது. மன்னர்களால் பெரும் உயர்வினை அடைய இயலாது என்று உணர்ந்து தன் மன்னர் பட்டத்தினை துறந்து துறவியானார் என்று கதை உள்ளது.[1]

சுவாமி வாகனம்[தொகு]

காமதேனு தன் கன்றுடன்

சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது. இறைவன் வீதி உலா வருகையில் காமதேனுவின் வாகனங்களில் காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "வஸிஷ்டர் வாயால் பிரம்மரிஷி". 2015-09-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. [1]

sghfjjyjjcbc//m dhrtghDHFJTYBVVB MMDF

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காமதேனு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

“இறைவன் வீதி உலா வருகையில் காமதேனுவின் வாகனங்களில் காட்சி தருகிறார்” என்பதற்கு ஆதாரம் வேண்டும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு&oldid=3365954" இருந்து மீள்விக்கப்பட்டது