இந்திரப்பிரஸ்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது டெல்லியில் ராஷ்டிர பவனத்தில் இருந்து கிழக்கே இரண்டரை மைல் தூரத்தில் இதிகாச காலங்கலில் பொலிவுற்று விளங்கிய இந்திரப்பிரஸ்தம் உள்ளது. தற்போது இது புராணகிலா என்றழக்கப்படுகிறது.

மயன் அமைத்த இந்திரப்பிரஸ்த நாட்டு மாயா சபையில் பாண்டவர்களுடன் அனைத்து நாட்டு அரசர்கள்

இந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் அனுப்பியதன் பேரில் மயன், இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.

இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரப்பிரஸ்தம்&oldid=3725095" இலிருந்து மீள்விக்கப்பட்டது