வாசுகி (பாம்பு)
Vasuki | |
---|---|
![]() கூர்ம அவதாரம் Avatar of Vishnu, below மந்திர மலை, with Vasuki wrapped around it, during Samudra manthan, the churning of the திருப்பாற்கடல். ca 1870 | |
அதிபதி | King of Nāgas |
வகை | நாக வழிபாடு |
இடம் | புவி |
பெற்றோர்கள் | கத்ரு |
சகோதரன்/சகோதரி | மானசா தேவி |
வாசுகி (சமஸ்கிருதம்: वासुकी, வாசுகி), என்பது இந்து தொன்மவியல் படி தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். வாசுகி காசிபர்-கத்ரு தம்பதியரின் மகனாகவும், பாற்கடலில், திருமால் பள்ளிக் கொள்ளும் பஞ்சணையாக இருக்கும் ஆதிசேசனின் சகோதரனாகவும் அறியப்படுகிறான்.[1]
சிவனது வரம்[தொகு]
ஆதிசேசன் திருமாலை சரணடைய, வாசுகி பாம்பானது சிவபெருமானை நோக்கி தவமிருந்து. வாசுகியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி வேண்டியவாறு, தன்னுடைய கழுத்தில் நாகாபரனமாக இருக்க வரமளித்தார்.
பாற்கடல் கடைதல்[தொகு]
சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாகக் கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர் பெற்றார்.[2]
காண்க[தொகு]
ஆதாரம்[தொகு]
- ↑ http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2960[தொடர்பிழந்த இணைப்பு] சங்கன் - பதுமனுக்கு சங்கர நாராயணனாகக் காட்சி தந்த சிவன்!
- ↑ http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=363