சஞ்சயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சஞ்சயன் என்பவர் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தின் [1]கதை மாந்தர்களுள் ஒருவராவார். இவர் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும், ஆலோசகனும் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.

இவர் மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். சஞ்சயன் தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. R. K. Narayan (2000). The Mahabharata: a shortened modern prose version of the Indian epic‎. University of Chicago Press. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சயன்&oldid=1987895" இருந்து மீள்விக்கப்பட்டது