கண்ணூர் மாவட்டம்
கண்ணூர் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.35546°Eஆள்கூறுகள்: 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.35546°E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | கண்ணூர் |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | கண்ணூர் |
மக்கள் தொகை • அடர்த்தி |
24,12,365 (2001[update]) • 813/km2 (2,106/sq mi) |
பாலின விகிதம் | 1090 ♂/♀ |
கல்வியறிவு | 92.80% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2966 கிமீ2 (1145 சதுர மைல்) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-KNR |
இணையதளம் | www.kannur.nic.in |
- கண்ணூர் நகரம் பற்றிய தகவல்களுக்கு கண்ணூர் கட்டுரையைப் பார்க்கவும்.
கண்ணூர் மாவட்டம் (மலையாளம்: കണ്ണൂര്) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கண்ணனூர். இந்த நகரத்தின் பெயரைத் தழுவியே மாவட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்துக்கு வடக்கில் காசர்கோடு மாவட்டமும், தெற்கில் கோழிக்கோடு மாவட்டமும் உள்ளன. கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது இது கர்நாடக மாநிலத்தில் எல்லையாகவும் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் மேற்கு எல்லை அரபிக் கடலால் வரையறுக்கப்படுகிறது.
கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%க்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 1,212,898. இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.
இம்மாவட்டத்தின் எழிமலையில் ஆசியாவின் மிகப்பெரிய இந்தியக் கடற்படை அகாதமி உள்ளது.[2]
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
- சட்டமன்றத் தொகுதிகள்:[3]
- பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி
- கல்லியாசேரி சட்டமன்றத் தொகுதி
- தளிப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி
- அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி
- தர்மடம் சட்டமன்றத் தொகுதி
- தலசேரி சட்டமன்றத் தொகுதி
- கூத்துப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி
- பேராவூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ INDIAN NAVAL ACADEMY
- ↑ 3.0 3.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
வெளியிணைப்புக்கள்[தொகு]