உள்ளடக்கத்துக்குச் செல்

கே. என். எழுத்தச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.என். எழுத்தச்சன் (K.N. Ezhuthachan, 21 மே, 1911-28 அக்டோபர், 1981) இந்திய எழுத்தாளரும், மலையாள இலக்கியவாதியும் ஆவார். இவர் தமது சமசுகிருதக் கவிதை நூலான 'கேரளயுதயம்'க்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்[1]. 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது மரணித்தார்[2].

இளமைப் பருவம்

[தொகு]

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் செர்புலச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வித்வான் தேர்வினை முடித்தபிறகு ஆசிரியப் பணியைத் தொடங்கினார். சிறிதுகாலம் மும்பையில் எழுத்தராகவும் சுருக்கெழுத்தராகவும் பணியாற்றினார். பின்னர் மலையாளம், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1953 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டு அங்கேயே முனைவர் பட்ட ஆய்வும் செய்தார். முனைவர் பட்டம் பெற்றபிறகு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் விரியுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மேலும், இவர் கேரள மாநில மொழிகள் மையத்தில் மூத்த ஆய்வு அதிகாரியாகவும், திராவிட மொழியியல் மையத்தில் ஆய்வாளராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்[3][4].

இலக்கியப் பணி

[தொகு]

இவர் மலையாளத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் மலையாள இலக்கணத் தொகுப்பான மலையாள இலக்கணக் கருத்தியல் வரலாறு என்ற நூலை வெளியிட்டுள்ளார்[5].

எழுதிய நூல்கள்

[தொகு]

சிறுகதைகள்

[தொகு]
  • கதமாலிகா
  • கதபூசனம்
  • கதமஞ்சுசா

கவிதைகள்

[தொகு]
  • குசுமோபகாரம்
  • பிரதிசுனா
  • கேரளாயுதயம் மகாகாவியம்

கட்டுரைகள்

[தொகு]
  • இலையும் வேரும்
  • கதிர்குலா
  • உழுத நிலங்கள்
  • எழிலம்பலா
  • கிரணங்கள்
  • தீபமாலா

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • குறுந்தொகை
  • கவிதைக்கொரு சதுகரனம்
  • வேணிசம்கரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Awards & fellowships - Akademi Awards". Sahitya Akademi, India's National Akademi of Letters. Archived from the original on March 31, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-29.
  2. Akhilavijnanakosam (மலையாளக் கலைக்களஞ்சியம், ), Vol. 4, D.C. Books.
  3. "University of Calicut – Department of Malayalam and Kerala Studies" (PDF). கோழிக்கோடு பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 2009-06-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. The history of the grammatical theories in Malayalam
  5. The history of the grammatical theories in Malayalam
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._எழுத்தச்சன்&oldid=3586722" இலிருந்து மீள்விக்கப்பட்டது