பாலக்காடு மாவட்டம்
பாலக்காடு | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 10°46′N 76°38′E / 10.76°N 76.64°Eஆள்கூறுகள்: 10°46′N 76°38′E / 10.76°N 76.64°E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | பாலக்காடு |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மாவட்ட ஆட்சியர் | எம். சி. மோகன்தாசு. |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு |
மக்கள் தொகை • அடர்த்தி |
26,17,072 (2001[update]) • 565/km2 (1,463/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4,629 சதுர கிலோமீட்டர்கள் (1,787 sq mi) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-09-XXXX |
இணையதளம் | palakkad.nic.in |
பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும்.
பெயர்க்காரணம்[தொகு]
முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.
வரலாறு[தொகு]
பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
இந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும். இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது.[2]
- திருத்தாலை சட்டமன்றத் தொகுதி
- பட்டாம்பி சட்டமன்றத் தொகுதி
- ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி
- ஒற்றப்பாலம் சட்டமன்றத் தொகுதி
- கோங்காடு சட்டமன்றத் தொகுதி
- மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி
- மலம்புழா சட்டமன்றத் தொகுதி
- பாலக்காடு சட்டமன்றத் தொகுதி
- தரூர் சட்டமன்றத் தொகுதி
- சிற்றூர் சட்டமன்றத் தொகுதி
- நென்மாறை சட்டமன்றத் தொகுதி
- ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[2]
வழிபாட்டுத் தலங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ 2.0 2.1 2.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ http://m.dinamalarnellai.com/web/news/50674