உள்ளடக்கத்துக்குச் செல்

இருளா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருளா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், , சேலம், செங்கல்பட்டு, காஞ்சி; கர்நாடகம்; கேரளாவின் பாலக்காடு மாவட்டம்; ; ஆந்திரப் பிரதேசம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
200,000  (2003)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3iru

இருளா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது எரவல்லன், எருக்கலா, இரவா, இருளர் மொழி, இருளவன், இருளிகா, இருளிகர், கொரவா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இருளர் மொழி தமிழெழுத்துக்களைக்கொண்டு எழுதப்படும் மொழி.

நெடுங்காலமாக தமிழின் ஒரு வட்டார மொழியாக அறியப்பட்டிருந்த இருளர் மொழி, சில சிறப்பு மாற்றங்களைக் கொண்டிருந்ததால் அதைத் தனி மொழியாகக் கருதலாமென காமில் சுவெலிபில் முன்வைத்தார். மொழிக்கும் வட்டார வழக்குக்கும் அடிப்படையான வரையறை இல்லையெனினும் இதைத் தமிழுடன் நெருங்கிய தொடர்புடைய தனிமொழியாகக் கருதலாமென்றும் அவர் கூறினார்.[1]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. காமில் சுவெலிபில் (1971). "Irula vowels". Indo-Iranian Journal 13 (2): 113-122. http://link.springer.com/article/10.1007%2FBF00163035?LI=true. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளா_மொழி&oldid=3341849" இலிருந்து மீள்விக்கப்பட்டது