இருளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இருளர்
Irulas1871.jpg
1871-72-ல் நீலகிரியில் இருளர்கள் சிலர்.
மொத்த மக்கள்தொகை
203,382[1] (2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பு)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
தமிழ் நாடு 189,621
கேரளம் 23,721
மொழி(கள்)
இருளா மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Soliga, தமிழர், Yerukala

தமிழ் நாட்டின் கோவை மாவட்டத்திலும் கேரளத்திலும் வசிக்கும் முதற்குடியினர் இருளர் (Irulas) ஆவார்கள்.[2] இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பட்டியல் வகுப்பினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை தோராயமாக 25,000 நபர்கள் எனக்கணித்துள்ளனர்.[3][4] இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது.

தொன்மம்[தொகு]

இவர்களின் பிறப்பு பற்றி இவர்கள் நடுவில் உள்ள நம்பிக்கை; மல்லன்- மல்லி ஆகிய தெய்வங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறார்கள். கிழவி மலை என்னும் மலைக் குகையினுள் ஒலி கேட்டு இரு தெய்வங்களும் குகை வாசலையடைந்து பார்தபோது குரலுக்குரிய இருவரை அறிகிறார்கள். நிர்வாணமாய் ஒரு ஆணும் ஒரு பெண்ணும், கொடுவன் ஆணின் பெயர், பெண்ணின் பெயர் சம்பி. நீங்கள் இனி கணவனும், மனைவியும் என்று மறைந்தன தெய்வங்கள். இவ்வழி பல இணைகள் பல்கிப் பெருகி குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், வெள்ளக் குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்பகுலம்... எனப் பனிரெண்டு குலங் களாகப் பல்கிப் பெருகிய இருளர் இனம். இதுவே தங்கள் இனத்தின் தோற்றம் குறித்து இருளர்கள் மதிக்கும் தொன்மம்.[5]

இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". Government of India. பார்த்த நாள் 28 October 2017.
  2. Perialwar, R. (1979), Phonology of Irula with Vocabulary, Annamalai University
  3. World Bank grant to improve standard of living for rat-catchers
  4. Irula Project Proposal and site report
  5. ஜனகப்பிரியா (ஏப்ரல், 13, 2016). "இருளர் காவியம்". கீற்று. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளர்&oldid=2648444" இருந்து மீள்விக்கப்பட்டது