காணிக்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காணிக்கார ஆண் ஒருவர்

காணிக்காரர் (Kanikaran) எனப்படுவோர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழுகின்ற பழங்குடியினர் ஆவர்.[1] இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது.

இவ்வின மக்கள் குட்டையான உருவமும், சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும், இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத்தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இவர்களிடத்தில் கொக்கரை எனும் தனித்துவம் வாய்ந்த இசைக்கருவியும் உண்டு.

இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.

இவர்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் உள்ளனர்.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Special report". Rediff. 11 October 2002. http://www.rediff.com/news/2002/oct/11spec.htm/. பார்த்த நாள்: 2017-04-05. 
  • தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், முனைவர் சு.சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998

வெளி இணைப்புகள்[தொகு]


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காணிக்காரர்&oldid=3708037" இலிருந்து மீள்விக்கப்பட்டது