காணிக்காரர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காணிக்காரர் மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளா, தமிழ்நாடு.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (25,000 காட்டடப்பட்டது: 1982)
திராவிடம்
கிரந்தத்துடன் கூடிய தமிழ் எழுத்துக்கள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kev

காணிக்காரர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வாழும் 25,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். காணிக்காரர் என்ற பழங்குடி இனமக்களே இம்மொழி பேசுபவர்கள் ஆவர்.

கணிக்கர், கணிக்கன், கணிகாரன், கண்ணிக்காரன், மலம்பாஷி, “கன்னித்தமிழ்” போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். இம்மொழி மலையாளத்தையும் தமிழையும் ஒத்திருக்கும்.

மொழி வளர்ச்சி[தொகு]

விக்கிமீடியாவின் அடைக்காப்பகத் திட்டத்தில் காணிக்காரர் மொழியில் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கோடு சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காணிக்காரர் விக்கிப்பீடியா

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காணிக்காரர்_மொழி&oldid=2229068" இருந்து மீள்விக்கப்பட்டது