உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்ல ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையைப் பயன்படுத்துவர், இதை மலையாள ஆண்டு என்றும் அழைப்பர். பொ.ஊ. 823-ல் இந்த ஆண்டு தொடங்கியதாக நம்புகின்றனர்.[1] வேணாட்டு அரசர் உதய மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த ஆண்டினை பயன்படுத்தினார் எனக் கருதுகின்றனர். சிங்கம், கன்னி உட்பட 12 மலையாள மாதங்கள் உள்ளன.

மாதங்கள்

[தொகு]
மலையாள மாதங்களும் பிற மாதங்களும்
மலையாள மாதம் கிரிகோரியன் நாட்காட்டி தமிழ் மாதம் சக மாதம்
சிங்கம் ஆகஸ்டு - செப்டம்பர் ஆவணி ஸ்ராவணம்-பாத்ரம்
கன்னி செப்டம்பர்-அக்டோபர் புரட்டாசி பாத்ரம்-ஆஸ்வினம்
துலாம் அக்டோபர்-நவம்பர் ஐப்பசி ஆஸ்வினம்-கார்த்திகம்
விருச்சிகம் நவம்பர்-டிசம்பர் கார்த்திகை கார்த்திகம்-ஆக்ரஹாயணம்
தனு டிசம்பர்-சனவரி மார்கழி ஆக்ரஹாயணம்-பௌஷம்
மகரம் சனவரி-பிப்பிரவரி தை பௌஷம்-மாகம்
கும்பம் பிப்பிரவரி-மார்ச்சு மாசி மாகம்-பால்குனம்
மீனம் மார்ச்சு-ஏப்ரல் பங்குனி பால்குனம்-சைத்ரம்
மேடம் ஏப்ரல்-மே சித்திரை சைத்ரம்-வைசாகம்
இடவம் மே-சூன் வைகாசி வைசாகம்-ஜ்யேஷ்டம்
மிதுனம் சூன்-சூலை ஆனி ஜ்யேஷ்டம்-ஆஷாடம்
கர்க்கடகம் சூலை-ஆகஸ்டு ஆடி ஆஷாடம்-ஸ்ராவணம்

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. சரித்ரம், பக்கம் 62 கேரளவிஞ்ஞானகோசம் 1988 பதிப்பு

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்ல_ஆண்டு&oldid=3910558" இலிருந்து மீள்விக்கப்பட்டது