தனு (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தில் பயன்படுத்தப்படும் கொல்ல ஆண்டின் ஐந்தாவது மாதம். சூரியன் தனுசு ராசியில் நிற்கும் காலமே தனு மாதம் எனக் கணக்கிடப்படும். இது டிசம்பர் - சனவரி மாதங்களுக்கு இடையில் வரும். தமிழ் மாதங்களான மார்கழி - தை மாதங்களுக்கு இடையில் வரும்.

கேரளத்தில் பெண்கள் திருவாதிரை விழாக் கொண்டாடும் காலமும் இம்மாதத்தில் தான். சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் நாள் திருவாதிரை நாள். பரமசிவன் இந்த நாளில் பிறந்ததாகச் சொல்வர். நல்ல கணவனைப் பெற திருவாதிரை நோன்பிருப்பர் பெண்கள்.


மலையாள மாதங்கள்
சிங்ஙம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனு | மகரம் | கும்பம் | மீனம் | மேடம் | இடவம் | மிதுனம் | கர்க்கடகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனு_(மாதம்)&oldid=2226346" இருந்து மீள்விக்கப்பட்டது