ஈழவர்
- ஈழத்தில் வாழும் தமிழர்களைப் பற்றி அறிய, ஈழத் தமிழர் என்ற பக்கத்தைக் காணவும்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,00,00,000 (மலையாளி மக்கள்தொகையில் 22.91%) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மொழி(கள்) | |
மலையாளம்/தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
வில்லவர், பில்லவா, பூசாரி, இல்லத்துப்பிள்ளைமார், தமிழர் |
ஈழவர் (Ezhava, மலையாளம்: ഈഴവര്) எனப்படுவோர் இந்தியாவின், கேரளத்தின் மாநிலத்தில் வாழுகின்ற ஒரு மிகப்பெரும் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர்.[சான்று தேவை] மலபார் பகுதிகளில் திய்யா என்றும் துளு நாட்டில் பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.[1][2][3][4] சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு[5][6] உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர்.[7][8] வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.
முந்தைய வரலாறு[தொகு]
திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை , ஈழவர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் ஈழவர் முதலிய பதினெட்டு சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.[9]
திருவிதாங்கூர் தோள் சீலை போராட்ட வரலாறு
நாயர், ஈழவர், பரதவர், முக்குவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காகச் சேலை அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Religion and Social Conflict in South Asia, Page 31,32". Bardwell L. Smith (BRILL Publishers). 1976. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004045104. http://books.google.co.in/books?id=07Y3AAAAIAAJ&pg=PA32&lpg=PA32&dq=Mannanar&source=web&ots=zGe8WSINDh&sig=01khfnK2KBO4Qp8uZemmeX0u6do&hl=en&sa=X&oi=book_result&resnum=9&ct=result#PPA32,M1. பார்த்த நாள்: சூலை 29, 2008.
- ↑ "Customs, law, family system in 19th Century Malaba" (PDF). Praveena Kodoth (CDS Publishers). 1997 இம் மூலத்தில் இருந்து 2008-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080807135753/http://www.cds.edu/download_files/338.pdf. பார்த்த நாள்: சூலை 27, 2008.
- ↑ "Nambutiris: Notes on Some of the People of Malabar". F. Fawcett, Fawsett Fred, Florence (Asian EducationalServices). 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120615751. http://books.google.co.in/books?id=ZPpUY4V-XN4C&pg=PA76&lpg=PA76&dq=Mannanar++Malabar&source=web&ots=-TObtKwgG4&sig=GUIYMyJWVGD5CksBay2nuNxujLk&hl=en&sa=X&oi=book_result&resnum=6&ct=result. பார்த்த நாள்: சூலை 29, 2008.
- ↑ "Malabar Manual". William Logan (Asian Educational Services). 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120604466. http://books.google.co.in/books?id=9mR2QXrVEJIC&pg=PA125&lpg=PA125&dq=Mannanar++Malabar&source=web&ots=KFlNwab3k8&sig=Ncw53eiw1goWTefsvF19hdbMRrQ&hl=en&sa=X&oi=book_result&resnum=4&ct=result#PPA125,M1. பார்த்த நாள்: சூலை 29, 2008.
- ↑ A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85
- ↑ Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85. Asia Publishing House, 1965. http://books.google.com/books?lr=&q=Chekon+caste. பார்த்த நாள்: 2007-12-28.
- ↑ Social Movements and Social Transformation.Page 23. (Macmillan, 1979. http://books.google.com/books?id=tZAiAAAAMAAJ&q=Chekor+kalari&dq=Chekor+kalari&lr=&pgis=1. பார்த்த நாள்: 2007-12-28.
- ↑ Farmers of India.Page 359. (Indian Council of Agricultural Research, 1961. http://books.google.com/books?lr=&id=4P1IAAAAMAAJ&dq=ezhava+kalari&q=%22Kalari+payal+experts+among+them%2C+a+notable+figure+being%22+&pgis=1. பார்த்த நாள்: 01-12-2008.
- ↑ ப.சிவனடி. இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820. siddharthan books. பக். 62&63.
வெளியிணைப்புகள்[தொகு]
- Sree Narayana Guru பரணிடப்பட்டது 2010-12-02 at the வந்தவழி இயந்திரம்
- Ezhava.org பரணிடப்பட்டது 2011-10-17 at the வந்தவழி இயந்திரம்
- Ezhava.net பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம்