பார்வதிபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஷ்வின்
பார்வதி
பாய்
பிறப்பு(1734-04-06)6 ஏப்ரல் 1734
பால்தான்
இறப்பு23 செப்டம்பர் 1763(1763-09-23) (அகவை 29)
சாத்தாரா
பணிமனைவியும் நிர்வாகியும்
வாழ்க்கைத்
துணை
சதாசிவராவ் பாவ்

பார்வதிபாய் (Parvatibai) (6 ஏப்ரல் 1734 - 23 செப்டம்பர் 1763) மூன்றாம் பானிபட் போரில் மராட்டிய இராணுவத்தின் தளபதியாக பணியாற்றிய சதாசிவராவ் பாவ் என்பவரின் இரண்டாவது மனைவியாவார். பென் பகுதியின் கொல்ஹட்கர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதல் மனைவி உமாபாய் இறந்த பின்னர் சதாசிவராவ் பாவுவை மணந்தார். எனவே பேஷ்வா குடும்பத்தில் உறுப்பினரானார். அவர் சாகுஜியின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். இவரது மருமகள் இராதிகாபாய் விசுவாசராவ் என்பவரை மணந்தார்.

பானிபட் போர்[தொகு]

சதாசிவராவின் கீழ் மராட்டியர்கள் வட இந்தியாவுக்குச் சென்றபோது, இவரும் தனது கணவருடன் சென்றார். பானிபட்டுக்கு செல்லும் வழியில் இவர் மதுரா மற்றும் பிருந்தாவனத்திற்கு நானா பட்நாவிசின் மராத்திய முகாமில் உள்ள பிற பெண்களுடன் யாத்திரை செய்தார். 1761 சனவரி 14 அன்று நடந்த இறுதிப் போரில் இவர் கலந்து கொண்டார். சதாசிவராவ் பாவின் சில விசுவாசமான மனிதர்களால் போர்க்களத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார். தப்பிச் செல்லும் வழியில் மல்கர் ராவ் ஓல்கரை தற்செயலாக சந்தித்தார், அவர் இவரை சம்பல் ஆற்றின் தெற்கே பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். [1]

தனது கணவரின் மரணமும் அதன் பின்விளைவும்[தொகு]

இவரது கணவர் சதாசிவராவ் பாவ் மூன்றாம் பானிபட் போரில் இறந்தார். போருக்கு முன்பு தன் கணவருக்கு வாக்குறுதியளித்தபடி வாழ்நாள் முழுவதும் தான் ஒரு விதவையாக இருக்க மறுத்துவிட்டார்.

இறப்பு[தொகு]

மராட்டியப் பேரரசில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்ட இவர் மாதவாராவ் ஆட்சியில் இருந்தபோது இறந்தார். நிமோனியா காரணமாக புனேவில் இறந்த இவர் இறந்த பிறகு சதாசிவராவ் பாவின் சதியாக நடத்தப்பட்டார். இவர் புனேவில் தகனம் செய்யப்பட்டார். இருப்பினும், மராட்டியர்கள் இவரது எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டும் நிலையில் இல்லை. இவரது மரணத்திற்குப் பின் சடங்குகள் இவரது சொந்த ஊரான பென்னில் செய்யப்பட்டன.

குறிப்புகள்[தொகு]

  1. Third Battle of Panipat by Abhas Verma ISBN 9788180903397 Bharatiya Kala Prakashan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதிபாய்&oldid=3078560" இலிருந்து மீள்விக்கப்பட்டது