கௌரி லட்சுமி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஹாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய்
திருவாங்கூர் மகாராணி
Sree Padmanabhasevini Maharani Gowri Lakshmi Bayi.jpg
ஆட்சி7 November 1810 - 1815
முடிசூட்டு விழா1810
முன்னிருந்தவர்பலராம வர்மா
பின்வந்தவர்கௌரி பார்வதி பாய்
மனைவிசங்கனாச்சேரி, கோயில் தம்புரான், இளவரசர் ராஜராஜ வர்மா
வாரிசு(கள்)மகாராணி கௌரி ருக்மினி பாய், மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மா, மகாராஜா உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
முழுப்பெயர்
உயர்வான ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய், அட்டிங்கல் மூதத தம்புரான், திருவாங்கூர் மஹாராணி
மரபுவேனாடு சொரூபம்
அரச குலம்குலசேகரா
தந்தைகிளிமனூர் கோயில் தம்புரான்
தாய்பரணித் திருநாள் பார்வதி பாய்
பிறப்பு1791
திருவாங்கூர்
இறப்பு1815 (aged 24)
திருவாங்கூர்
சமயம்இந்து சமயம்

மஹாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய் (Gowri Lakshmi Bayi) (1791-1815) இந்திய மாநிலமான திருவிதாங்கூர் மகாராணியாவார். அவரது மகன் சுவாதி திருநாள் ராம வர்மாவிற்கு பிறகு 1813 முதல்1815 ஆம் ஆண்டு முடிய அவர் இறக்கும் வரை ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் ராம வர்மாவின் பிரதிநிதியாக ஆட்சி செய்த பின் இரண்டாண்டுகள் திருவாங்கூரின் ராணியாக தன் சொந்த உரிமையுடன் ஆட்சி செய்தார்,[1]

பின்னணி[தொகு]

கௌரி லட்சுமி பாய் 1791 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரச குடும்பத்தின் அட்டிங்கலின் மூத்த ராணி இளவரசி பரணி திருநாள் பார்வதி பாயிக்குப் பிறந்தார், மகாராஜா பலராம வர்மாவின் சகோதரியாக தத்தெடுக்கப்பட்டவர் ஆவார். திருவாங்கூர் மகாராணிகள் "அட்டிங்கலின் ராணிகள்" என்று அழைக்கப்பட்டனர். கௌரி லட்சுமி பாய் திருவாங்கூரின் மிகவும் பிரபலமான ராணியில் ஒருவராக இருந்தார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவருக்கு உத்தரத்தட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாய் எனற ஒரு சகோதரி இருந்தார்.

பதவியேற்றல்[தொகு]

செல்வாக்கற்ற திருவாங்கூர் மகாராஜாவான பலராம வர்மாவின் ஆட்சியின் போது வேலு தம்பி தளவாயின் மிக முக்கியமான கலகம் உட்பட எழுச்சிகள் மற்றும் தேவையற்ற சண்டைகள் மற்றும் சதித்திட்டம் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சினைகள் தோன்றியது, 1811 இல் இவர் இறந்தார். மகாராஜா இறந்தபோது, அட்டிங்கலின் மூத்த ராணி கௌரி லட்சுமி பாயிக்கு, இருபது வயதே ஆனது. குடும்பத்தில் அரசனாக தகுதி இல்லாத ஆண் உறுப்பினர்கள் இருந்தனர். எனவே கௌரி லட்சுமி பாய், 1811 ஆம் ஆண்டில் திருவாங்கூர் ஆட்சியின் மகாராணியாக பொறுபேற்றுக் கொண்டார்.

சமூக சீர்திருத்தங்கள்[தொகு]

  • திருவிழாக்கள் மீது வரி, சொத்துரிமை மீதான வரி ரத்து செய்யப்பட்டது.
  • திருவாங்கூர் கோவிலில் பெரிய அளவில் ,நடைபெற்ற ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை நீக்கியது.
  • 1812 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று அரச பிரகடனம் மூலம்,மகாராணி கௌரி லட்சுமி பாய் அடிமைகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதை அகற்றினார், மேலும் விவசாய நோக்கங்களுக்காக மண்ணுடன் இணைந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்கினார்.
  • ஈழவர் கனியன் போன்ற சாதியினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிந்து கொள்வதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
  • 1813 ஆம் ஆண்டில் அவரது ஆட்சியின் கீழ் ஒரு தடுப்பூசி துறையானது திருவாங்கூரில் தொடங்கப்பட்டது.

குடும்பம் மற்றும் இறப்பு[தொகு]

மகாராணி கௌரி லட்சுமி பாயி, சங்கனாச்சேரி அரச குடும்பத்தைச் சேர்ந்த கோயில் தம்புரான், இளவரசர் ராஜராஜ வர்மா அவர்களை மணந்தார். இந்த திருமணத்தின் மூலம் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். அவரது மகள் மகாராணி கவுரி ருக்மிணி பாயி 1809 இல் பிறந்தார். அவரது மூத்த மகன் புகழ்பெற்ற சுவாதி திருநாள் 16 ஏப்ரல் 1813 அன்று பிறந்தார், அவர் ஒரு இசைக்கலைஞரும் ஆவார். இவர் 1829-1846 முதல் சுதந்திரமாக ஆட்சி செய்தார். அவர் திருவட்டார் அம்மவீடு குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பெண்ணை மணந்தார். மகாராணிக்கு அடுத்து 1814 ல் உத்ரம் திருநாள் மார்த்தண்ட வர்மா என்ற ஒரு மகன் பிறந்தார். இவர் 1846-1860 வரை மகாராஜாவாக ஆட்சி செய்தார். உத்ரம் திருநாள் மார்த்தண்ட வர்மா பிறந்த பிறகு 1815 இல் மஹாராணி கௌரி லட்சுமி பாயி இறந்துவிட்டார். அவளுடைய சகோதரியான கவுரி பார்வதி பாயி அவருக்குப் பின்னர் மகாராணியாக பதவியேற்றார். இவர் 1819 இல் திருவல்லா அரச குடும்பத்தின் ராம வர்மா கோயில் தம்புரானைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட ஏழு குழந்தைகள் இருந்தனர்.

முழுப் பெயர்[தொகு]

ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய், அட்டிங்கல் மூதத தம்புரான், திருவாங்கூர் மஹாராணி.

குறிப்புகள்[தொகு]

  1. Gauri Lakshmi Bai, Aswathi Thirunal (1998). SREE PADMANABHA SWAMY KSHETRAM. Thiruvananthapuram: The State Institute Of Languages. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7638-028-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_லட்சுமி_பாய்&oldid=2701091" இருந்து மீள்விக்கப்பட்டது