கோழிக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோழிக்கோடு
கோழிக்கோடு
இருப்பிடம்: கோழிக்கோடு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77ஆள்கூற்று : 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோழிக்கோடு
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
மக்களவைத் தொகுதி கோழிக்கோடு
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 4,36,527 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


1 மீற்றர் (3.3 ft)

கோழிக்கோடு (மலையாளம்:കോഴിക്കോട്, ஆங்கிலம்:Kozhikode), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

கோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும் தமிழர்களால் கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பெற்றது. ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் பிறராலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 436,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோழிக்கோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மலையாளமே இந்நகர மக்களின் தாய்மொழியும், ஆட்சிமொழியும் ஆகும். எனினும், பெரும்பான்மையானவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று அறியப்படுகிறது.

ஊடகம்[தொகு]

முக்கிய மலையாள நாளிதழ்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அனைத்திந்திய வானொலி மற்றும் தனியார் வானொலிகளும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்களே.

Kozhikode Mavoor Road Bus Stand

கல்வி[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/chiefminister.php
  2. "Kozhikode". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு&oldid=1908751" இருந்து மீள்விக்கப்பட்டது