கொல்லம்
கொல்லம் | |
|---|---|
மாநகராட்சி | |
கொல்லம் | |
கொல்லம் பெருநகரப் பகுதிக்குள் நகரின் இருப்பிடம் | |
கொல்லம் (கேரளம்) | |
| ஆள்கூறுகள்: 8°53′36″N 76°36′51″E / 8.8932°N 76.6141°E | |
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | |
| பகுதி | தெற்கு கேரளா |
| மாவட்டம் | கொல்லம் |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி |
| • மேயர் | பிரசன்னா எர்னஸ்ட்[1] |
| • துணை மேயர் | கொல்லம் மது[1] |
| ஏற்றம் | 38.32 m (125.72 ft) |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 691xxx |
| தொலைபேசி | +91474xxxxxxx |
| இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் | KL-02 |
| இணையதளம் | kollamcorporation |
கொல்லம் (மலையாளம்: കൊല്ലം) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் ஒரே மாநகராட்சி ஆகும்.[2][3]
இது இந்தியாவின் மலபார் கடற்கரையில் இலட்சத்தீவுக் கடல் எல்லையில் உள்ள ஒரு பண்டைய துறைமுகம் மற்றும் நகரமாகும். இது மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ளது.[4] இந்த நகரம் அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லடா ஆற்றின் கரையில் உள்ளது .[5][6][7] இது கொல்லம் மாவட்டத்தின் தலைமையகமாகும். கேரளாவின் நான்காவது பெரிய நகரமான கொல்லம் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் தென்னை நார் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இது கேரளாவின் உப்பங்கழியின் தெற்கு நுழைவாயில் மற்றும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
புவியியல்
[தொகு]கொல்லம் பகுதியானது, 8°53′36″N 76°36′51″E / 8.8932°N 76.6141°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 28.32 மீட்டர் (125.72 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 361,441 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கொல்லம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கொல்லம் மக்கள் தொகையில் 11%, ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
[தொகு]- 1 2 https://kollamcorporation.gov.in/en
- ↑ "DTPC Kollam | Kollam Tourist Places". DTPC kollam (in ஆங்கிலம்). Retrieved 2026-08-07.
- ↑ Express News Service (2026-07-28). "Custodial torture alleged in Kollam man's death". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2026-08-07.
- ↑ "Kollam on the itinerary". The Hindu. 14 September 2018. Retrieved 14 September 2018.
- ↑ Cities of Kerala
- ↑ "Kerala Cities". Archived from the original on 24 November 2014. Retrieved 19 August 2014.
- ↑ Alphabetical listing of Places in State of Kerala
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
