கருநாகப்பள்ளி
கருநாகப்பள்ளி என்னும் நகரம், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்டது. இது 211.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
கேரளத்தில் பள்ளி என்று அழைக்கப்பட்ட ஊர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவையாக இருந்தன. மைனாகப்பள்ளி, கார்த்திகப்பள்ளி உள்ளிட்ட ஊர்களும் முற்காலத்தில் புத்த சமய கோயில்களைக் கொண்டிருந்ததாகக் கருதுகின்றனர்.
முற்காலத்தில் ஆய் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
கருநாகப்பள்ளியில் படநாயர்குளங்கரை மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பண்டாரத்துருத்து கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இதை போர்த்துகீசர் நிறுவியதாகக் கருதுகின்றனர்.
சுற்றுப்புறம்[தொகு]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]