பரவூர்

ஆள்கூறுகள்: 8°54′40″N 76°40′08″E / 8.911°N 76.669°E / 8.911; 76.669
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவுர்
பரவுர்
இருப்பிடம்: பரவுர்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 8°54′40″N 76°40′08″E / 8.911°N 76.669°E / 8.911; 76.669
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கொல்லம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி பரவுர்
மக்கள் தொகை 43,739 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பரவூர் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கொல்லம் நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் அமைந்துள்ளது.

புவியியல் அமைப்பு[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°47′N 76°00′E / 8.78°N 76°E / 8.78; 76 ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2] இந்த நகரத்தில் கடற்கரை நிறைய உள்ளன. இந்த நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,739 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3][3]

பரவூர் புட்டிங்கல் கோயில் வெடி விபத்து[தொகு]

பரவூரிலுள்ள புட்டிங்கல் பகவதி அம்மன் கோயில் வருடாந்திரத் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த கிடங்கி 10 ஏப்ரல் 2016 அன்று அதிகாலையில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். [4] [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. Falling Rain Genomics, Inc – Paravur
  3. 3.0 3.1 "Kollam District Level Statistics 2011". censusindia.gov.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Population Finder(Census-2011)" defined multiple times with different content
  4. கேரளம் - கொல்லம் கோயில் வெடி விபத்து: பலி 110 ஆக அதிகரிப்பு; 350 பேர் காயம்
  5. கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paravur, Kollam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவூர்&oldid=2222767" இலிருந்து மீள்விக்கப்பட்டது