வயநாடு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வயநாடு
—  மாவட்டம்  —
வயநாடு
இருப்பிடம்: வயநாடு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 11°36′18″N 76°04′59″E / 11.605°N 76.083°E / 11.605; 76.083ஆள்கூற்று: 11°36′18″N 76°04′59″E / 11.605°N 76.083°E / 11.605; 76.083
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் கல்பேட்டா
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
கலெக்டர் அசுவினி குமார் ராய்
மக்களவைத் தொகுதி வயநாடு
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q7975848(Qualifier Political party (102) is missing under P585 in d:Q7975848)

மக்கள் தொகை

அடர்த்தி

7,80,619 (2001)

369/km2 (956/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2131 கிமீ2 (823 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-


வயநாடு மாவட்டம் இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி கேரளாவின் 12 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர் ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப் பகுதியில் பல பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[2]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இது மூன்று வட்டங்களைக் கொண்டுள்ளது.[3]

கல்பற்றா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி ஆகியவை பெரிய நகரங்களாகும்.

இந்த மாவட்டத்தை மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பற்றா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்திருக்கின்றனர்.[3]

இந்த மாவட்டத்தின் பகுதிகள் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[3]

அம்பலவயல் மலர் கண்காட்சி[தொகு]

வயநாடு அம்பலவயல் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பூப்பொலி என்ற பெயரில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக 12 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சனவரி 1 முதல் 18 வரையில் நடைபெறும் மலர் கண்காட்சியில் 1,640 வகை ரோஜாக்கள், 1,200 வகை டேலியா மலர்கள், 15 வகை கிளாடியோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது.[4]

சுற்றியுள்ளவை[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "வயநாடு நிலப்படம்" (PDF) (2008). பார்த்த நாள் 2008-09-07.
  3. 3.0 3.1 3.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  4. வயநாடு, அம்பலவயல் மலர் கண்காட்சி

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயநாடு_மாவட்டம்&oldid=2753244" இருந்து மீள்விக்கப்பட்டது